Wednesday, Apr 16, 2025

ட்ரக் கவிழ்ந்து விபத்து..11 பேர் உயிரிழப்பு - 7-க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

Accident Killed Rajasthan Road 11
By Thahir 3 years ago
Report

24 பேருடன் சென்று கொண்டிருந்த ட்ரக் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டம், குதா கோர்ஜி பகுதியில் நடைபெற்ற சாலை விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், 7-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 24 க்கும் மேற்பட்டோர் ட்ரக்கில் சொந்த ஊருக்கு சென்றுகொண்டு இருந்த நேரத்தில், அதிவேக பயத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ட்ரக், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதனால் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. விபத்தில், குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

மேலும், 7 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

 மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும்,காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் பிரதமர் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.