வேகமெடுக்கும் கொரோனா : பிரதமர் மோடி ஆலோசனை

covid india modi advice Narendra
By Jon Apr 04, 2021 07:02 AM GMT
Report

கொரோனா தொற்று நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் உள்ள உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். நாடு முழுவதும் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது . கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசுமேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது, தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்துவது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 93 ஆயிரத்து 249 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.