வேகமெடுத்த கொரோனா பரவல்..மதுரையில் மூடப்பட்ட 18 தெருக்கள்
மதுரையில் கொரோனா பரவல் காரணமாக 18 தெருக்கள் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமெடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 1.26 லட்சம் பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் 4,000 பேர் விதம் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது. தமிழகத்தில் மதுரையில் மட்டும் நாள் ஒன்றுக்கு 100 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது வரை திருப்பாலை, கேகே நகர், விளாங்குடி, வில்லாபுரம், பல்லவி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 18 தெருக்கள் மூடப்பட்டு உள்ளன.
இதனால் அந்த 18 தெருக்கள் சீல் வைத்து மூடப்பட்டுள்ளன. இதனால் இந்த பகுதிகளுக்கு வெளியே இருந்து யாரும் உள்ளேயோ,உள்ளிருந்து வெளியவோ யாரும் வர முடியாது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த பகுதி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.