ஆஸ்கார் 2023 விருது - அமெரிக்காவில் 200 தியேட்டர்களில் ‘RRR’ படம் மறுவெளியீடு... - குவியும் வாழ்த்துக்கள்..!

Top10 Tamil Cinema India
By Nandhini Feb 23, 2023 08:23 AM GMT
Report

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான RRR திரைப்படம் 2023ம் ஆண்டு ஆஸ்கார் விருதுகளுக்கு முன்னதாக அமெரிக்காவில் மீண்டும் வெளியிட உள்ளது.

RRR திரைப்படம்

இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ‘ஆர்ஆர்ஆர்’. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் கடந்த ஆண்டு வெளியானது. இப்படம் சுமார் ரூ.1,150 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. உலகம் முழுவதும் வெளியிடப்பட்ட இப்படம் பல கோடிகளை அள்ளியது.

academy-awards-2023-rrr-movie-oscars

அமெரிக்காவில் RRR படம் மறுவெளியீடு

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான RRR திரைப்படம் 2023ம் ஆண்டு ஆஸ்கார் விருதுகளுக்கு முன்னதாக அமெரிக்காவில் மீண்டும் வெளியிட உள்ளது. இதை படத்தின் விநியோகஸ்தர் வேரியன்ஸ் பிலிம்ஸ் டுவிட்டர் மூலம் உறுதி செய்துள்ளார்.

இந்த டோலிவுட் பிளாக்பஸ்டர் வரும் மார்ச் 3 முதல் அமெரிக்காவில் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்பட உள்ளது. RRR படம் தெலுங்கில் திரையிடப்பட உள்ளது.

RRR படத்தில் இடம் பெற்ற ‘நாட்டு நாடு’ பாடல் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. மேலும், உலகின் உயரிய விருதுகளில் ஒன்றான கோல்டன் குளோப் விருது விழாவில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலும் சிறந்த பாடலுக்கான விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

வரும் மார்ச் 1ம் தேதி ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தியேட்டரில் நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ராம் சரண், இயக்குனர் ராஜமௌலி, இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

தற்போது இது தொடர்பான தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.