தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு : முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்ட ஏ.பி.வி.பி. அமைப்பினர் கைது

arrested dmkstalin abvpchief
By Irumporai Feb 14, 2022 10:27 AM GMT
Report

லாவண்யா மரணத்துக்கு நீதிகேட்டு முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்ட ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்த சுமார் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியிலுள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் படித்த, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி லாவண்யா  தற்கொலை செய்து கொண்டார்.

இவரது மரணத்திற்கு மதமாற்றம் செய்ய சொன்னதுதான் காரணம் என்று கூறி ஹிந்து முன்னணி, பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

இந்த நிலையில் மாநில போலீஸாரின் விசாரணையில் திருப்தி இல்லாததாகக் கூறி, சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோரி மாணவியின் பெற்றோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததில் சி.பி.ஐ. விசாரணைக்கு தடைவிதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில். இன்று 50-க்கும் மேற்பட்ட அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் முதலமைச்சர்  ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் , இவர்களில், சுமார் 40 பேரை போலீஸார் கைது செய்தனர்.