தாய்,தங்கையின் ஆபாச வீடியோவை காதலனுக்கு அனுப்பிய காதலி!

Abuse Trichy
By Thahir Jun 25, 2021 10:43 AM GMT
Report

காதலித்து பழகி வந்த பெண்ணை செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டியதோடு, பெண்ணின் தாய், தங்கை ஆகியோரின் ஆபாச வீடியோவையும் எடுத்து தர சொல்லி கேட்டு மிரட்டிய காம காதலன் போலீசில் சிக்கியுள்ளான்.தாய்,தங்கையின் ஆபாச வீடியோவை காதலனுக்கு அனுப்பிய காதலி.

தாய்,தங்கையின் ஆபாச வீடியோவை காதலனுக்கு அனுப்பிய காதலி! | Abuse Trichy

திருச்சி மாவட்டம், துவாக்குடியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் அப்பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுடன் பழகி வந்தார். ஆரம்பத்தில் நட்பாக பழகிய இவர்கள் நாளடைவில் காதலிக்க தொடங்கினர்.

இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்ப்பதற்காக இளம் பெண் சென்றுள்ளார். இதேபோல் சதீஷ்குமாரும் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணி கிடைத்து சென்றுள்ளார். இளம் பெண்ணை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி நெருக்கமாக பழகி உள்ளார் சதீஷ் குமார்.

இருவரும் வெளியூரில்தானே இருக்கிறோம். யாருக்கு தெரியப்போகிறது என நினைத்து, ஒரே அறையில் தங்கி குடும்பம் நடத்தியுள்ளனர். எதற்கும் தேவைப்படும் என நினைத்து, உல்லாசமாக இருந்ததை செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துள்ளார் சதீஷ்குமார்.

இளம் பெண்ணிடம் உல்லாச வாழ்க்கை சலித்துப்போனதும், வேறு ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும் அதே பெண்ணை கல்யாணம் செய்து கொள்ளப்போவதாக, இளம் பெண்ணிடம் சொல்லியிருக்கிறான் சதீஷ். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த காதலி. அழுது கதறியுள்ளார். ஆனால், செல்போனில் உல்லாசமாக இருக்கும்போது எடுத்த வீடியோவை காட்டிய சதீஷ், இது பேஸ்புக்கில் போட்டுவிடுவேன், இது வெளியில் தெரியாமல் இருக்க வேண்டும்னா, என் வழியில் குறுக்கே வராதே என மிரட்டியிருக்கிறார். இதனால் இளம் பெண், சதீஷ் வேறு பெண்ணை திருமணம் செய்ய சம்மதித்துவிட்டார்.

இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு சதீஷுக்கும், அவர் காதலித்த வேறொரு பெண்ணுக்கும் கல்யாணம் நடைபெற்றது.

சதீஷ் தனக்கு கல்யாணம் ஆன பிறகு சில நாட்கள் கழித்து மீண்டும் பழைய காதலியுடன் செல்போனில் பேசி பழகி வந்துள்ளார். என்னோடு மறுபடி உல்லாசமாக இருக்காவிட்டால் உன்னுடன் இருக்கும் உல்லாசமாக இருக்கும் வீடியோவை இணையதளத்தில் பரப்பிவிடுவேன் என்று மறுபடியும் மிரட்டியுள்ளார்.

என்னசெய்வதென்றே புரியாமல் குழம்பிப்போன அந்த இளம் பெண் மீண்டும் சதீஷ் என்ன சொன்னாலும் செய்யும் அளவிற்கு போய் விட்டாராம். இளம் பெண் இருக்கும் போது உன்னோட நிர்வாண படம் என்கிட்ட இருக்கு, ஆனால் எனக்கு உங்க அம்மாவின் நிர்வாண படம் பார்க்க ஆசை. அதை செல்போனில் வீடியோ எடுத்து அனுப்பு என மிரட்டியுள்ளார். பயந்து போன இளம் பெண், தன வீட்டு பாத்ரூமில் தாய் குளிக்கும் போது செல்போனை மறைத்து வைத்தும், ஆடை மாற்றும் இடத்தில் செல்போனை வைத்து வீடியோ எடுத்து, அதை தனது காதலனுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதை பார்த்து ரசித்த காதலன் சதீஷ், இளம் பெண்ணிடம் தங்கை வீடியோவையும் கேட்டுள்ளார். அதேபோல தங்கை குளிப்பதையும், ஆடை மாற்றுவதையும் வீடியோ எடுத்து அனுப்பி வைத்துள்ளார் இளம் பெண்.

இப்படி அக்கா, தங்கை, அம்மா என, இளம் பெண் குடும்பத்தையே வீடியோவில் ரசித்த சதீஷ், தனது காதலி (இளம் பெண்ணை) விடுவதாக இல்லை தொடர்ந்து வித விதமாக ஆபாசமாக படம் எடுத்து அனுப்ப சொல்லியிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் இளம் பெண் ஒரு மார்க்கமாக செல்போனை வைத்துக் கொண்டு அலைவதை கண்டுபிடித்தனர் அவரது குடும்பத்தார். விசாரித்தபோது அழுதபடியே எல்லாவற்றையும் சொல்லிவிட்டார் இளம் பெண். ஆடிப்போன குடும்பத்தினர், திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம் பெண்ணை அழைத்துச் சென்று புகார் கொடுத்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் சதீஷிடம் விசாரணை நடத்திய போலீசார் அவரின் செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் சதீஷ் மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியதாக 2 பிரிவிகளிலும், கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக ஒரு பிரிவிலும் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப் பதிந்து கைது செய்தனர். கல்யாண ஆசை வார்த்தை காட்டி பெண்ணிடம் பழகி, அந்த பெண்ணின் அம்மா மற்றும் தங்கையின் ஆபாச படத்தையும் கூட எடுத்து வைத்து மிரட்டிய காதலன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.