உங்க இஷ்டத்துக்குலாம் மாத்த முடியாது - பாலியல் புகாரில் சிக்கிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

petition abuse case rajesh das
By Anupriyamkumaresan Oct 27, 2021 12:42 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

கடந்த பிப்ரவரி மாதம் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் என்பவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, 127 சாட்சிகளை விசாரித்து, 73 ஆவணங்கள் உள்ளிட்டவை அடங்கிய ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் குற்றச்சம்பவம் பயணத்தின் போது நடந்துள்ளதாகக் கூறப்படுவதால், வழக்கை கள்ளக்குறிச்சி அல்லது செங்கல்பட்டு நீதிமன்றங்களில் தான் விசாரிக்க வேண்டும் எனவும், விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்க அதிகாரமில்லை என சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை ரத்து செய்து, வழக்கை செங்கல்பட்டு அல்லது கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என ராஜேஷ் தாஸ் கோரிக்கை வைத்தார்.

உங்க இஷ்டத்துக்குலாம் மாத்த முடியாது - பாலியல் புகாரில் சிக்கிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி | Abuse Case Rajes Das Petition Cancelled

அதேபோல அதுவரை விழுப்புரம் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் சஸ்பெண்ட் ஆன ராஜேஷ்தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்து இன்று தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன் ராஜேஷ்தாஸ் மனுவை தள்ளுபடி செய்ததோடு, விழுப்புரம் நீதிமன்றம் வழக்கு விசாரணையை மூன்று மாதத்தில் முடிக்க உத்தரவிட்டுள்ளார்.