இன்றைய ஐபிஎல்: சிஎஸ்கேவுடன் மோதும் கொல்கத்தா - மும்பையை வெல்லுமா ஆர்சிபி?
அமீரகத்தில் அனல் பறக்க அரங்கேறி வரும் ஐ.பி.எல். தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.
அபுதாபியில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தோனி தலைமையிலான சென்னை அணி நடப்பு சீசனில் விளையாடிய 9 போட்டிகளில் 7 இல் வெற்றி கண்டு புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணி விளையாடிய 9 போட்டிகளில் 4 இல் வெற்றி பெற்று 4 ஆம் இடத்தில் உள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் களம் கண்டுள்ளன. அவற்றில் சென்னை அணி 16 முறையும், கொல்கத்தா அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை.
இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறும் போட்டியில் ரோகித் தலைமையிலான மும்பை அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் களம் காண்கின்றன.
மும்பை அணி நடப்பு சீசனில் விளையாடிய 9 போட்டிகளில் 4 இல் வெற்றி கண்டு புள்ளிகள் பட்டியலில் 6 ஆம் இடத்தில் உள்ளது. பெங்களூரு அணி விளையாடிய 9 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் மும்பை அணி 17 போட்டிகளிலும், பெங்களூரு அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன