சிறைச் சாலைகளில் நூலகம் - நீதிமன்றம் சரமாரி கேள்வி!
சிறைகளில் நூலகம் அமைக்க கோரிய வழக்கில், தமிழக உள்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
சிறைகளில் நூலகம்
மதுரை, புதுக்கோட்டையைச் சேர்ந்த சகா என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்,"தமிழகத்தில் 135 மத்திய சிறைகள், 3 பெண்களுக்கான சிறப்பு சிறைகள், 103 துணை சிறைகள், 10 பெண்களுக்கான துணை சிறைகள்
இவை தவிர 7 சிறப்பு துணை சிறைகள் உள்ளன. பெரும்பாலான சிறைகளில் அதற்கான முறையான உள் கட்டமைப்பு வசதிகள் இல்லை. காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் இல்லை. சிறை கைதிகளுக்கான விதிகளிலும், சிறைகளில் நூலக வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், அது அனைத்து கைதிகளுக்கும் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும் எனவும் உள்ளது.
நீதிமன்றம் கேள்வி
ஆனால் பெரும்பாலான சிறைகளில் இவை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை. ஆகவே தமிழகத்தின் அனைத்து சிறைகளிலும் நூலகத்திற்கான உள் கட்டமைப்பு வசதிக கள், டிஜிட்டல் நூலகங்கள் உருவாக்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு, "பல நேரங்களில் கைதிகளின் உளவியல் சிக்கல்களுக்கு தீர்வாக இவை உதவும். சிறைகளில் நூலகங்கள் வைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்செனவே உத்தரவிட்டுள்ளது என குறிப்பிட்டு,
வழக்கு தொடர்பாக தமிழக சிறைத் துறையின் கூடுதல் செயலர், தமிழக உள்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.