இந்த நாட்டில் தான் செட்டிலாகனும்; துடிக்கும் இந்தியர்கள் - என்ன காரணம்?
வெளிநாட்டினர் அமீரகத்தில் செட்டிலாக விருப்பம் தெரிவிப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.
அமீரகம்
National Bonds நிறுவனம் வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் குறித்த ஆய்வு ஒன்றை நடத்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், அமீரகத்தில் தற்போது வேலைசெய்யும் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 37 சதவிகிதம் வெளிநாட்டவர்கள்,
அங்கேயே தங்கள் மீதமுள்ள ஓய்வு காலத்தை கழிக்க விரும்புகிறார்கள். கோல்டன் விசா மற்றும் ஓய்வூதிய விசா காரணமாக அதிகமானோர் ஓய்வு பெற விரும்புகின்றனர் . 8 சதவிகித மக்கள், தங்களது கனவு இலக்காக உள்ள ஒரு நாட்டில், குடிபெயருவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
வெளிநாட்டவர் விருப்பம்
84 சதவீத ஐக்கிய அரபு எமிரேட் குடியிருப்பாளர்கள், அவசரகால நிதியை வைத்திருப்பது முக்கியம் என்று நம்புகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் சொந்தமாக வணிகம் செய்யவும், வீடு வாங்கவும குழந்தைகளின் கல்வியைப் பாதுகாக்க அவ்வாறு செய்கின்றனர்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கும் அங்கு நல்ல சலுகைகள் கிடைத்து வருகின்றது, ஆகவே இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து அங்கு செல்பவர்கள் பலர் அங்கேயே குடிபெயர்வதை ஒரு குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.