தாலிக்கும் அதுக்கும் வித்தியாசம் தெரியாதா உங்களுக்கு : கொந்தளித்த அபிராமி

By Irumporai 2 வாரங்கள் முன்
Report

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான நடிகை அபிராமி வெங்கடாசலம் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். எப்போதும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியீட்டு ரசிகர்களுடன் சோஷியல் பதிவுகளை போட்டு எப்போதுன் ஆக்டிவாக இருப்பார்.

அபிராமிக்கு கல்யாணமா

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு புகைப்படத்தை பகிர்ந்திர்ந்தார் அதில் , அவர் கழுத்தில் மஞ்சள் நிற கயிறை அணிந்திருந்தார் , அதனை பார்த்த பல ஊடகங்கள், அபிராமிக்கு திருமணம் முடிந்துவிட்டதாக செய்திகள் வெளியிட்டனர்.

தாலிக்கும் அதுக்கும் வித்தியாசம் தெரியாதா உங்களுக்கு : கொந்தளித்த அபிராமி | Abrami Is Bitter About The News Of Marriage

கொந்தளித்த அபிராமி

இந்த நிலையில் இந்த செய்திகளுக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அபிராமி ” நோன்பு சரடுக்கும், தாலிக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியாதா..? இது போல ஒரு பொய்யான செய்திகளை எழுதுபவர்களுக்கு மூளை இறங்கி மூட்டிக்கு வந்துவிட்டது என்று சந்தேகமாக இருக்கிறது என கோபத்துடன் பேசியுள்ளார். தற்போது அபிராமி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.