அதிமுக பாஜக மோதலா ? மைக்கை பிடுங்கிய கரு நாகராஜ் - பரபரப்பில் தமிழக பாஜக
பாஜக கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி திறனவற்றவர் என பாஜக பிரமுகர் பேசும் போது கருநாகராஜ் அவரிடமிருந்து மைக்கை பிடுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக ஆர்ப்பாட்டம்
வட மாநில தொழிலாளர்கள் குறித்து விவகாரத்தில் தவறாக செயல்பட்டதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மைக் பறிப்பு
அப்போது பாஜக நிர்வாகி விஜய் ஆனந்த் மேடையில் பேசுகையில், தமிழகத்தில் நாம் தான் எதிர்க்கட்சி என நிரூபித்து வருகிறோம். எடப்பாடி பழனிச்சாமி எல்லாம் திறனற்றவர், ஆளுமையில்லாதவர் என கூற ஆரம்பிக்கையில் உடனே சட்டென சுதாரித்த கரு நாகராஜ் மைக்கை அவரிடம் இருந்து பிடுங்கி விட்டார்.
இதனால் கூட்டத்தில் சிறுது சலசலப்பு ஏற்பட்டது
பாஜக அதிமுகவிடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.