விவாகரத்து கேட்கும் மருமகள்கள்? மயில்சாமி குடும்பத்தில் சோகம் - என்ன நடக்கிறது!
மறைந்த மயில்சாமி குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள் அவர் ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயில்சாமி
தமிழ்த் திரை உலகத்தில் பல முன்னணி காமெடியன்களில் ஒருவராக இருந்தவர் மயில்சாமி. காமெடியனாக மட்டும் இல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் இவரின் நடிப்பு அமோகமாக இருக்கும்.

இவரை நகைச்சுவை நடிகராகத்தான் இன்றைய தலைமுறைக்கு தெரியும். ஆனால் லைட்மேன், மிமிகிரி ஆர்ட்டிஸ்ட், சண்டைக்காட்டிச்சிகளுக்கு டப்பிங் என நடிகராவதற்கு முன்னரே இவரின் சினிமா பயணம் பலரும் அறியாத ஒன்று. சில நாட்களுக்கு முன்னர் இந்த உலகை விட்டு மறைந்தார் மயில்சாமி. இவரின் பிரிவுக்கு திரை உலகமே சோகத்தில் ஆழ்ந்தது.
விவாகரத்து
இந்நிலையில், மயில்சாமி மறைந்து நான்கு மாதங்களே ஆன நிலையில் அவர் குடும்பத்தில் நடந்திருக்கும் சில சம்பவங்கள் மயில்சாமி ரசிகர்கள் மற்றும் அவர் நண்பர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயில்சாமியின் இரண்டு மகன்களான அருமை நாயகம் மற்றும் யுவன் ஆகிறோருக்கு மயில்சாமி உயிருடன் இருக்கும்போதே திருமணம் செய்து வைத்தார். ஆனால் அவர்களின் திருமண வாழ்க்கை அவ்வளவு சுமுகமாகப் போகவில்லை என பேசப்படுகிறது.
இரண்டு மருமகளுக்கும் மயில்சாமியின் மனைவிக்கும் எப்போதும் பிரச்சனை வந்துகொண்டே இருந்ததாம். வழக்கமான மாமியார்மருமகள் சண்டையாகத்தான் இருந்ததாம். மயில்சாமி இருந்தபோது இந்த பிரச்சனைகளை வெளியில் தெரியாமல் பார்த்துள்ளார். ஆனால் அவர் மறைவுக்குப் பின்னர் அது பெரிதாக வளர்ந்து தீர்க்க முடியாத பிரச்சனையாக வளர்ந்துள்ளது.

மயில்சாமியின் மகன்கள் இரண்டு பேரும் அம்மா பக்கம் நிற்பதா இல்லை மனைவி பக்கம் நிற்பதா என்று குழப்பத்தில் பிரச்சனையை பெரிதாக வளர விட்டுவிட்டார்கள். இப்போது மருமகள்கள் இரண்டு பேரும் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளார்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது பரவி வருகிறது.
அனைவருக்கும் உதவும் குணம் படைத்த மயில்சாமியின் குடும்பத்தில் இப்படி நடப்பது அவர் ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் வேதனை ஏற்படுத்தியுள்ளது.
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan