கருக்கலைப்பு - சட்ட உரிமையாக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
மெக்சிகோவில் கருக்கலைப்பு செய்வதற்கு சட்டப்படி உரிமையளிக்க வலியுறுத்தி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மெக்சிகோவில் ஒட்டுமொத்தமாக 4 மாநிலங்களில் மட்டுமே கருக்கலைப்பு செய்து கொள்ள சட்டப்படி உரிமை உண்டு. இந்நிலையில் அதனை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்திட வலியுறுத்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் பெண்கள் கருக்கலைப்பு செய்ய செல்லும் போது கூட அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது எந்த வகையில் நியாயம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.
பேரணியாகச் சென்றவர்களை காவல்துறையினர் தடுக்க முற்பட்ட போது தடுப்புகளை தகர்த்தும், சிக்னல் விளக்குகளை உடைத்தும் பெண்கள் தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்