கருக்கலைப்பு நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவல் - அதிரடி ஆய்வால் தெறித்து ஓடிய பெண்..!

Tamil nadu
By Thahir May 09, 2022 04:28 PM GMT
Report

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள ராமநத்ததில் மருந்தகத்தில் கரு கலைப்பு செய்ததின் மூலம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தால் கடலூர்மாவட்ட இணை இயக்குநர் மருத்துவ பணிகள் டாக்டர் ரமேஷ் பாபு தலைமையிலான மருத்துவகுழு இன்று மங்களூர் கிராமத்தில் மருந்தகத்தில் ஆய்வு செய்து வந்தனர்.

இந்த நிலையில் சிறுப்பாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மங்களூர் கிராமத்தில் ஒரு வீட்டில் வைத்து கருக்கலைப்பு நடைபெறுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருந்து துறையினர்,

மங்களூர் கிராமத்திலுள்ள சிவன் கோவில் தெருவில் குமார் (வயது-48) வீட்டில் மேல் மாடியில் உள்ள ஒரு அறையில் வைத்து ஒரு பெண்ணிற்கு கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து உட்கார வைத்திருந்தார்.

இதனை கடலூர் இணை இயக்குனர் தலைமையிலான குழு ஆய்வு செய்து அந்தப் பெண்ணை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு 108 -ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.

இதனை அறிந்த குமார் அவருடைய மனைவி சித்ரா தப்பி ஓட்டம் சிறுபாக்கம் உதவி ஆய்வாளர் மூலம் இணை இயக்குனர் வழக்கு பதிவு செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டு சென்றார்.

இதுகுறித்து சிறுபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது