தீப்பெட்டி மூலப்பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் - கனிமொழி

Smt M. K. Kanimozhi Tamil nadu
By Thahir Dec 12, 2022 11:50 AM GMT
Report

தீப்பெட்டி மூலப்பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து வேண்டும் என மக்களவையில் திமுக எம்பி கனிமொழி மத்திய அரசுக்கு வலியுறுத்தி உள்ளார்

ஜிஎஸ்டி வரியை ரத்து வேண்டும்

தீப்பெட்டி தயாரிக்க தேவையான அட்டை, குச்சி, பேப்பர் உள்ளிட்ட பல மூலப்பொருட்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரியும், மெழுகு, பொட்டாஷியம் குளோரேட் ஆகிய மூலப்பொருட்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படுகிறது.

மூலப்பொருட்களின் விலை உயர்ந்தாலும், ஜிஎஸ்டி வரி உயர்ந்தாலும், தீப்பெட்டி விலை பெரும்பாலும் 1 ரூபாய்க்கு தான் விறக்கப்படுகிறது.

இதில் தீப்பெட்டியின் அடக்க செலவில் 4-ல் ஒரு பங்கு, தொழிலாளர்களுக்கு சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.

தீப்பெட்டி மூலப்பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் - கனிமொழி | Abolish Gst On Matchbox Raw Materials Kanimozhi

இதனை கருத்தில் கொண்டு தீப்பெட்டி மூலப்பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இதனை குறிப்பிட்டு, தீப்பெட்டி மூலப்பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து வேண்டும் என மக்களவையில் திமுக எம்பி கனிமொழி மத்திய அரசுக்கு வலியுறுத்தி உள்ளார்.