‘கயல்‘ சீரியல் அபி நவ்யா - நடிகர் தினேஷ் திருமணம் கோலாகலமாக நடந்தது - ரசிகர்கள் வாழ்த்து
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் நடக்கத்தில் ஆனந்தியாக நடித்து வரும் அபி நவ்யா - தினேஷ் இவருடைய திருமணம் கோலாகலமாக நடந்துள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் ‘கயல்’. இத்தொடரில் நடித்துக் கொண்டிருப்பவர் அபி நவ்யா. இவருக்கும், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘என்றென்றும் புன்னகை’ தொடர் நாயகன் தீபக்கிற்கும் நேற்று சென்னையில் திருமணம் நடைபெற்றது.
தீபக் டிக்டாக் மூலம் பிரபலமானவர். இதனையடுத்து, அவர் சின்னத்திரைக்குள் நுழைந்து, கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான ‘திருமணம்’ சீரியலில் நடித்தார்.
இதனையடுத்து, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’விலும் இவர் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் ஒரு வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர்.
இதன் பின் இவர்கள் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததையடுத்து திருமணம் நடைபெற்றுள்ளது. திருமண வரவேற்பில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
இத்திருமணம் குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.