ஒரு பக்கம் கமலை திட்டுறாரு.. இன்னொரு பக்கம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போறாரு
பிக்பாஸ் 5 வீட்டில் இருக்கும் அபிஷேக் ராஜா நடிகர் கமல்ஹாசனை விளாசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் நேற்று தொடங்கியது. இதில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள நிலையில், அவர்களில் இணையப் பிரபலம் அபிஷேக் ராஜாவும் ஒருவர். இதனிடையே அபிஷேக் ராஜா பற்றிய ஒரு பழைய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அதில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியையும், கமலையும் சரமாரியாக விளாசியுள்ளார். அந்த வீடியோவில் ஊருக்கே தெரியும்டா உங்களை கேமரா வச்சு எடுத்துக்கிட்டு இருக்காங்கனு. ஆனால் கிடைச்ச 100 நாள்ல நீ தமிழ்நாடு சி.எம். ஆகணும் என்பதற்காக பண்ற வேலைலாம் இருக்கு தெரியுமா?. முடியலடா என்னால, கேட்டால் பிக் பாஸுங்கிறீங்க என்கிறார்.
அபிஷேக் பேசிய வீடியோவை ட்விட்டரில் கமலை டேக் செய்து இணையவாசிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
@ikamalhaasan bro idhu enanu konjam paarunga.. pic.twitter.com/66nacsrgxv
— Adheera ? (@rajni712dhoni) October 4, 2021