60 நிமிடத்தில் 45 சிக்ஸர்கள் - பவுலர்களை அலறவிட்ட அபிஷேக் சர்மா
அபிஷேக் சர்மா 60 நிமிடங்களில் சுமார் 45 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.
அபிஷேக் சர்மா
பஞ்சாப் அணியின் கேப்டனான அபிஷேக் சர்மா, ஜெய்ப்பூருக்கு வெளியே உள்ள அனந்தம் கிரிக்கெட் மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார்.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த வலைப்பயிற்சியில், ஆஃப்-ஸ்பின், லெக்-ஸ்பின் என மாறி மாறி பந்துவீசிய போதும், சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
45 சிக்ஸர்கள்
அதன்படி, கணக்கிட்டால் 60 நிமிடங்களில் குறைந்தபட்சம் 45 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். அவர் அடித்த அடியில், குறைந்தது 5 பந்துகள் மைதானத்திற்கு அருகில் உள்ள உயரமான குடியிருப்பின் போர்டிகோவிற்கே சென்று விழுந்தன.
அந்த ஒரு மணி நேரத்தில் அவர் 3 அல்லது 4 முறை மட்டுமே அவுட் ஆகியிருப்பார். இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.