ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த அபிஷேக் சர்மா - துண்டு சீட்டில் இருந்தது என்ன?
நேற்று 2025 ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 27வது லீக் போட்டியில், பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதியது.
ஹைதராபாத் வெற்றி
டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிரடியாக ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்தது.
பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார். ஹைதராபாத் தரப்பில் ஹர்ஷத் படேல் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
தொடர்ந்து 246 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி, 18.3 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பில் 247 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது.
தொடக்க ஆட்டக்கார இறங்கிய அபிஷேக் சர்மா 55 பந்துகளில் 141 ரன்கள் குவித்து ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்தார்.
முதல் இந்திய வீரர்
ஐபிஎல் வரலாற்றில் 3வது அதிகபட்ச தனி நபர் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் இதுவாகும். மேலும், இந்திய வீரரின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் இதுவாகும்.
கிறிஸ் கெயில் 175 ரன்களுடன் முதலிடத்திலும், பிரண்டன் மெக்கலம் 158 ரங்களுடன் 2வது இடத்திலும் உள்ளனர்.
ஐபிஎல் வரலாற்றில் சேஸ் செய்யப்பட்ட 2வது அதிகபட்ச இலக்கு (246 ரன்கள்) இதுவாகும்.
சதமடித்து விட்டு அபிஷேக் சர்மா ஒரு துண்டுச்சீட்டை எடுத்து, ரசிகர்களை நோக்கி காட்டினார்.
THE ABHISHEK SHARMA NOTE:
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 12, 2025
"This one is for Orange Army". 🧡 pic.twitter.com/o9ZLSQDLp6
அதில், 'This one is for Orange Army' என எழுதப்பட்டிருந்தது.
தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த ஹைதராபாத் அணி, இந்த வெற்றியின் மூலம் 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.