பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிகழ்ந்த கடைசி நேர ட்விஸ்ட்: இந்த வாரம் வெளியேறிய பிரபலம் இவர்தான்

பிக்பாஸ் Biggbossseason5tamil
By Petchi Avudaiappan Oct 24, 2021 12:17 AM GMT
Report

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து இந்த வார எவிக்‌ஷனில் அபிஷேக் ராஜா வெளியேறியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும்  பிக்பாஸ் நிகழ்ச்சியில் முந்தைய சீசன்களைப் போல இல்லாமல் வழக்கத்திற்கு மாறாக 18 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த சீசனில் முதலாவது ஆளாக திருநங்கை நமீதா மாரிமுத்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் . அவர் வெளியேறியதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிகழ்ந்த கடைசி நேர ட்விஸ்ட்:  இந்த வாரம் வெளியேறிய பிரபலம் இவர்தான் | Abhishek Raja Evicted This Week From The Bbhouse

தொடர்ந்து கடந்த வாரம் நடந்த முதல் எவிக்‌ஷனில் மலேஷியாவில் இருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நாடியா சாங் வெளியேற்றப் பட்டார். டாஸ்குகளில் அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் இருந்து வந்ததுதான் நாடியாவின் வெளியேற்றத்துக்கான காரணம் எனச் சொல்லப்பட்டது.

இந்நிலையில் இந்த வார எவிக்‌ஷனுக்கான நாமினேஷன் பட்டியலிலும் பலர் இருந்த சூழலில் வார இறுதி எபிசோடுக்கான ஷூட்டிங் நேற்று காலை தொடங்கியது. கமல் கலந்துகொண்ட இந்த ஷூட்டிங்கில் எவிக்‌ஷனுக்கான நேரம் வந்தபோது மக்களின் வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட வேண்டிய இருவராக அபிஷேக் ராஜாவும் நாட்டுப்புறப் பாடகி சின்னப் பொண்ணுவும் இருந்தனர்.

ஆனால் கடந்த வாரம் நடந்த காயின் டாஸ்க் மூலம் சின்னப் பொண்ணு கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட அபிஷேக் எவிக்ட்டாகி உள்ளார். பிக்பாஸ் வீட்டில் அபிஷேக் நடத்திய சண்டை, சச்சரவுகள் தான் அவர் வெளியேற்றப்பட்டுள்ளதற்கு காரணமாக கூறப்படுகிறது.