நடிகை ஐஸ்வர்யா ராயை விட்டு பிரியும் அபிஷேக் பச்சன் – திருமண வாழ்க்கை முடிவுக்கு வருதா?

Thahir
in பிரபலங்கள்Report this article
நடிகை ஐஸ்வர்யா ராயை விட்டு அபிஷேக் பச்சன் பிரிய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காதல் திருமணம்
கடந்த 2007 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், உலக அழகி பட்டம் பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் பிரியப் போவதாக பேசப்பட்டு வருகிறது. காரணம் அபிஷேக் பச்சன் கை விரலில் போட்டிருந்த மோதிரம் இல்லாதது தான் இந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியுடன் பிரிவா?
திருமணம் ஆனதில் இருந்து அபிஷேக் பச்சன் வெளியே வந்தது இல்லை என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் அபிஷேக் பச்சன் அண்மையில் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் அவர் கையில் திருமண மோதிரம் இல்லை.
இதை பார்த்த ரசிகர்கள் அபிஷேக் இதுவரை திருமண மோதிரத்தை கழட்டியது இல்லை என்றும் அப்படி என்றால் ஐஸ்வர்யா ராயுக்கும், அபிஷேக் பச்சனுக்கும் பிரச்சனை எழுந்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
காதலித்து திருமணம் செய்து கொண்ட இருவரும் 16 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வரும் நிலையில் தற்போது இது போன்ற ஒரு தகவல் வெளியாகி பாலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.