பிக்பாஸ் நிகழ்ச்சியில் புகைப்பிடிக்கும் நடிகை அபிராமி - தீயாய் பரவும் வீடியோ

abhirami biggbossultimate abhiramismokingscene
By Petchi Avudaiappan Jan 31, 2022 10:57 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் நாளே நடிகை அபிராமி குறித்து சர்ச்சை கிளம்பியுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 5 சமீபத்தில் நிறைவடைந்தது. இதில் டைட்டில் வின்னராக நடிகர் ராஜூ தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அந்த தொலைக்காட்சி பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சியை கையில் எடுத்தது. 

இந்நிகழ்ச்சி 24 மணி நேரமும் டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் போட்டியாளர்களாக  வனிதா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சுஜா வருணி, தாமரை செல்வி, ஷாரிக் ஹசன், சினேகன், சுருதி, அபினய், ஜூலி, நிரூப், அபிராமி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். 

இந்நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிராமி செய்த செயல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 24 மணி நேரமும் நேரலையாக ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் டிவியில் காட்டப்படாத காட்சிகளும் சென்சார் கட் செய்யாமல் இடம் பெறும். 

அந்த வகையில் பிக் பாஸ் வீட்டுக்குள் புகை பிடிக்கக்கூடிய பழக்கம் இருப்பவர்களுக்கு ஒரு அறை இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்த அறையில் நிரூப், அபிநய், ஷாரிக் மற்றும் அவர்களுக்கு பின்புறமாக கண்ணாடியில் ஒரு பெண் போட்டியாளரும் இருக்கின்றார். அவர்தான் அபிராமி. அவரும் அங்கு நின்று புகைப்பிடிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனைப் பார்த்த இணையவாசிகள் பலரும் கடுமையாக விமர்சிக்க சிலர்  இதுல என்ன ஆண், பெண் என அபிராமிக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.