பிக்பாஸ் நிகழ்ச்சியில் விடாது துரத்தும் ஓவியா - ஜூலி பிரச்சனை : பதறிப்போன ரசிகர்கள்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஓவியாவை பற்றி சக போட்டியாளர்கள் ஜூலியிடம் கேள்வி கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 5 சமீபத்தில் நிறைவடைந்தது. இதில் டைட்டில் வின்னராக நடிகர் ராஜூ தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அந்த தொலைக்காட்சி பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சியை கையில் எடுத்தது.
இந்நிகழ்ச்சி 24 மணி நேரமும் டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் போட்டியாளர்களாக வனிதா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சுஜா வருணி, தாமரை செல்வி, ஷாரிக் ஹசன், சினேகன், சுருதி, அபினய், ஜூலி, நிரூப், அபிராமி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதனிடையே நிகழ்ச்சி தொடங்கிய இரண்டாவது நாளே ஜூலியிடம் போட்டியாளர்கள் கேள்வி கேட்கிறோம் என்கிற பெயரில் கேட்ட கேள்வி ஜூலியை மட்டுமல்லாமல் அவருடைய ரசிகர்களையும் கலங்க வைத்துள்ளது.
முதல் சீசனின் நடிகை ஓவியா - ஜூலி இடையேயான பிரச்சனை ஊர் அறிந்த ஒன்று. இந்நிலையில் சக போட்டியாளரான அபிராமி, ஜூலியிடம் ஒரு கேள்வியை எழுப்பி இருக்கிறார். அதில் நீங்க ரொம்ப ஓவியா மாதிரி இருக்க ட்ரை பண்ற மாதிரி இருக்கு என்று கூறியிருக்கிறார். அதற்கு ஜூலி எப்போதும் போல சிரித்துக் கொண்டே, ஓவியா மாதிரி இருக்கணும் என்று எல்லாம் ட்ரை பண்ணல என்று பதில் கூறியுள்ளார்.