பாவனியால் முடிவுக்கு வந்த அபிநய் விவாகரத்து பிரச்சனை - விரக்தியில் எடுத்த முடிவு
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அபிநய் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ள நிலையில் தனது விவாகரத்து சர்ச்சைகளுக்கு முடிவு கட்டியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துக் கொண்ட மறைந்த நடிகர் ஜெமினி கணேசன் பேரனும், நடிகருமான அபிநய் நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளரான நடிகை பாவனியுடன் சர்ச்சையில் சிக்கினார்.
நிகழ்ச்சியில் நுழைந்த ஆரம்பத்திலிருந்தே இவர் நன்றாக விளையாடி வந்த அபிநய் -பாவனி இடையே இருந்த நட்பு குறித்து பல வதந்திகள் பரவிய நிலையில் கடைசியில் இவருடைய பெயர் டேமேஜ் ஆனது தான் மிச்சம். அதிலும் சம்பந்தப்பட்ட பாவனியே அவருக்கு எதிராக திரும்பியது ரசிகர்களிடையே கோபத்தை கிளப்பியது.
இதற்கிடையில் அபிநயால் பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்த பிரச்சனைகள் காரணமாக அவரது மனைவி அபர்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த அபிநய் பெயரை நீக்கினார். இதனால் இருவரும் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற செய்தி பரவ தொடங்கியது. இந்நிலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ள அபிநய் தனது விவாகரத்து சர்ச்சைகளுக்கு முடிவு கட்டியுள்ளார்.
ரசிகர் ஒருவர் நீங்கள் உங்கள் மனைவியை விவாகரத்து செய்து கொள்ள போகிறீர்களா என்று கேள்வி எழுப்ப அதற்கு நான் இந்த கேள்வியை பலமுறை சமூக வலைத்தளத்தில் பார்த்து இருக்கிறேன். ஆனால் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்னுடைய மனைவிதான் என்னுடைய வாழ்க்கையில் எல்லாமே என அபிநய் பதிலளித்ததோடு மட்டுமல்லாமல் அபிநய் மற்றும் அவருடைய குழந்தை மனைவி மூவரும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.