Monday, Jul 21, 2025

இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானியாக பதவியேற்றார் அபிலாஷா பாரக்!

By Swetha Subash 3 years ago
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானியாக அரியானா மாநிலத்தை சேர்ந்த அபிலாஷா பாரக் என்ற பெண் பதவியேற்றார்.

அரியானா மாநிலம், பஞ்ச்குலாவை சேர்ந்த அபிலாஷா பராக், கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராணுவ வான்பாதுகாப்பு படையில் சேர்ந்தார். இவரது தந்தை இந்திய ராணுவத்தில் காஷ்மீரில் கர்னலாக பதவி வகித்து ஓய்வு பெற்ற ஓம் சிங் ஆவார்.

இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானியாக பதவியேற்றார் அபிலாஷா பாரக்! | Abhilasha Barak First Woman Combat Pilot In Army

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள போர் விமானிகள் பயிற்சி பள்ளியில் ராணுவ போர் விமானிகளாக 36 பேருடன் அபிலாஷா பாரக்கும் பயிற்சி முடித்துள்ள நிலையில், அவருக்கு பயிற்சி நிறைவு பதக்கத்தை ராணுவ வான்பாதுகாப்பு படை தலைமை இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.சூரி அணிவித்தார்.

இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானியாக பதவியேற்றார் அபிலாஷா பாரக்! | Abhilasha Barak First Woman Combat Pilot In Army

ராணுவ வான்பாதுகாப்பு படையில் சேருவதற்கு முன்னர் கேப்டன் அபிலாஷா, தொழில் ரீதியில் நிறைய ராணுவ படிப்புகளை படித்துள்ளார். தந்தை வழியில் மகளும் நாட்டுக்காக ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.