Sunday, Apr 6, 2025

பிரபாகரன் உயிருடன் இல்லை : இலங்கை ராணுவம் கருத்து

By Irumporai 2 years ago
Report

பழ நெடுமாறனின் கருத்து உண்மையில்லை என்றும், பிரபாகரன் தற்போது உயிருடன் இல்லை என்றும் இலங்கை ராணுவம் கருத்து தெரிவித்துள்ளது.

பிரபாகரன் உள்ளார்   

தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பழ.நெடுமாறன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்கள் நலமுடன் இருக்கிறார். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உரிய நேரத்தில் வெளிப்படுவார் என்றும்தமிழினம் பற்றி விரிவான திட்டத்தை பிரபாகரன் விரைவில் அறிவிப்பார். பிரபாகரன் குடும்பத்தினருடன் நான் தொடர்பில் இருப்பதால் அவர்கள் அனுமதியுடன் இதை கூறுகிறேன் என தெரிவித்திருந்தார்.

பிரபாகரன் உயிருடன் இல்லை : இலங்கை ராணுவம் கருத்து | Abhakaran Is Alive Sri Lanka Army Denial

இலங்கை ராணுவம் மறுப்பு   

இந்த நிலையில் இலங்கை போரில் பிரபாகரன் 2009 மே- 18ஆம் தேதி இறந்ததாக கூறப்பட்ட நிலையில் பழ நெடுமாறன் புதிய தகவலை தெரிவித்திருந்த நிலையில், பழ நெடுமாறனின் கருத்து உண்மையில்லை என்றும், பிரபாகரன் தற்போது உயிருடன் இல்லை என்றும் இலங்கை ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.