ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து.. அதை எதிர்பார்த்தால் நடக்காது - பாக். வீரர் சர்ச்சை பேச்சு!
ஐஸ்வர்யா ராயை உவமையாக்கி தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரஸாக்.
சர்ச்சை கருத்து
இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என பலரும் எதிர்பார்த்த நிலையில் தோல்விகளை சந்தித்து வெளியேறியது. இதனால் பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் அப்துல் ரஸாக் பேசியதாவது "பாகிஸ்தான் அணிக்கு தற்போது ஒரு மன எழுச்சி தேவை. அந்த காலங்களில் யூனிஸ் கான் ஒரு கேப்டனாக ஒரு நல்ல எண்ணம் கொண்டிருந்தார். அது எனக்கு சிறப்பாக செயல்பட நம்பிக்கையை அளித்தது. உண்மையில், பாகிஸ்தானில் வீரர்களை உருவாக்கி மெருகூட்ட வேண்டும் என்ற நல்ல எண்ணம் எங்களுக்கு இல்லை.
மன்னிப்பு கோரிய அப்துல் ரஸாக்
நீங்கள் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துகொண்டு ஒழுக்கமுள்ள குழந்தையை எதிர்பார்க்க விரும்பினால், அது ஒருபோதும் நடக்காது" என்று கூறினார். இதை கேட்டவுடன் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் ஷாகித் அப்ரிடி, உமர் குல் ஆகியோர் கைதட்டி சிரித்து ரசித்தனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதனை பார்த்த பலரும் அப்துல் ரசாக்கிற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து தனது கருத்துக்கு மன்னிப்பு கோரி அவர் கூறியதாவது "நேற்று, நாங்கள் கிரிக்கெட் பயிற்சி மற்றும் வியூகங்களைப் பற்றி விவாதித்தோம்.
அப்போது ஐஸ்வர்யா ராயின் பெயரை தவறுதலாக நான் வாய் தவறி குறிப்பிட்டுவிட்டேன். நான் அவரிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்கிறேன். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை” என்று தெரிவித்தார்.