நரேந்திர மோடியால்தான் அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் ஆனார்: சர்ச்சையினை ஏற்படுத்திய பாஜக தலைவர்
பிரதமர் நரேந்திர மோடியால்தான் அப்துல்கலாம் குடியரசுத் தலைவர் ஆனார் என மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீலின் பேச்சு சர்ச்சை ஏற்பட்டுத்தியுள்ளது. புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல். பிரதமர் நரேந்திர மோடி சாதாரண மக்களுக்கு வாய்ப்பு அளித்து வருவதாக கூறினார்.
அவர் தான் ஏ.பி.ஜே. அப்துல் கலாமை நாட்டின் குடியரசு தலைவராக ஆக்கினார். அப்துல் கலாமை மதத்தின் காரணமாக குடியரசு தலைவராக ஆக்கவில்லை. விஞ்ஞானியாக அவரின் அளப்பரிய பணிகளுக்காக தான் குடியரசு தலைவர் ஆக்கப்பட்டார்என அவர் கூறியுள்ளார். அப்துல் கலாம் குடியரசு தலைவரான 2002-ம் ஆண்டு வாஜ்பாய்தான் நாட்டின் பிரதமராக இருந்தார்.
அப்போது மோதி குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார். ஆனால் மோடிதான் அப்துல் கலாமை குடியரசுத் தலைவர் ஆக்கினார் என சந்திரகாந்த் பாட்டீல் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.