காணாமல் போன குழந்தை - 51 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்..!

United States of America
By Nandhini Nov 29, 2022 01:14 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

காணாமல் போன குழந்தை சுமார் 51 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

51 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த பெண்

அமெரிக்கா, டெக்சாஸில் 1971ம் ஆண்டு 22 மாத குழந்தையாக இருந்த மெலிசா ஹைஸ்மித் என்ற குழந்தை பராமரிப்பாளரால் அவரது வீட்டிலிருந்து கடத்தப்பட்டார்.

அவர் காணாமல் போனதிலிருந்து ஹைஸ்மித் குடும்பம் இழந்த குழந்தையை உயிருடன் கண்டுபிடிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். பல இடங்களில் தேடி அலைந்தனர்.

கடந்த 51 ஆண்டுகளாக, மெலிசாவைத் தேடுவதை குடும்பத்தினர் நிறுத்தவே இல்லை. இந்நிலையில்,  டி.என்.ஏ. சோதனை மூலமாக அவரது குடும்பம் அப்பெண்ணை கண்டுபிடித்துள்ளது. 

கடத்தப்பட்ட அப்பெண் இந்த வாரம் ஃபோர்ட் வொர்த்தில் உள்ள குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்ததாக மகிழ்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

abducted-51-years-ago-reunited-with-her-family