ஏபிசிடி தெரியாதவர்களெல்லாம் இன்னைக்கு அரசியல்வாதி : அண்ணாமலை விமர்சனம்

Tamil nadu BJP K. Annamalai
By Irumporai 2 மாதங்கள் முன்

தமிழகத்தில் ஏபிசிடி தெரியாதவர்களெல்லாம் இன்று அரசியல்வாதிகளாக வந்துள்ளார்கள் என விமர்சித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கரூரில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அண்ணாமலை , தமிழகத்தில் சில மூடர்கள் கூட்டம் அரசியல்வாதிகளாக மாறியுள்ளனர்.

ஏபிசிடி தெரியாதவரெல்லாம் அரசியல்வாதி

இவர்களையெல்லாம் அரசியல்வாதிகளாக வைத்து பார்க்க வேண்டிய சாபக்கேட்டில் நாம் இருக்கிறோம், என கூறியுள்ளார். ஏபிசிடி தெரியாதவர்களெல்லாம் இன்று அரசியல்வாதிகளாக வந்துள்ளார்கள். பாஜகவை எதிர்க்கிறேன் என்பதற்காக முட்டாள்தனமான, அபாண்டமான கருத்துக்களை கூறாக கூடாது.

ஏபிசிடி தெரியாதவர்களெல்லாம் இன்னைக்கு அரசியல்வாதி : அண்ணாமலை விமர்சனம் | Abcd Have Become Politicians Today Annamalai

மதவாத கட்சி திமுக

இப்படிப்பட்ட கருத்துக்களை கூறுபவர்களை மூடர் கூட்டம் என்று தான் சொல்ல வேண்டும். மதவாத கட்சி திமுகவா? பாஜக? ஒரு மதத்திற்கு மட்டும் வாழ்த்து சொல்லும் நீங்கள் மதவாத கட்சியா? நாங்கள் மதவாத கட்சியா? என கேள்வி எழுப்பியுள்ளார்.