விஷாலின் நம்பிக்கை துரோகம்..மனவருத்தத்துடன் கூறிய அப்பாஸ்
மீடியா வெளிச்சம் இல்லாமல் வாழ்ந்து வந்த நடிகர் அப்பாஸ் தற்போது மீண்டும் தலைப்பு செய்திகளில் இடம்பெறும் அளவிற்கு அடுத்தடுத்து பேட்டிகளை அளித்து வருகின்றார்.
அப்பாஸ்
90-களின் பிற்பகுதியில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக அறியப்பட்டவர் நடிகர் அப்பாஸ். காதல் தேசம் படத்தில் அறிமுகமான இவர், ரஜினியிடன் படையப்பா, கமலுடன் பம்மல் கே சம்மந்தம், அஜித்துடன் கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன், ஆனந்தம், வி ஐ பி போன்ற தொடர் வெற்றி படங்களில் நடித்து வந்த அப்பாஸ் ஒரு கட்டத்திற்கு பிறகு படவாய்ப்புகள் இனி சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.
விஷாலின் துரோகம்
பிறகு குடும்பத்துடன் நியூசிலாந்து நாட்டில் சென்று சிறு சிறு வேலைகள் செய்து வாழ்ந்து வந்த அப்பாஸ் தற்போது மீண்டும் பேட்டிகள் அளித்து தலைப்பு செய்தியாக மாறியுள்ளார். அப்படி ஒரு பேட்டியில் தான் அவர் தனக்கு விஷால் செய்த துரோகம் குறித்து வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்.
செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடரின் போது, தனக்கும் விஷாலுக்கும் இடையே ஒரு சிறு கருத்து முரண்பாடு ஏற்பட்டது என கூறி, ஆனால் அந்த விஷயத்தை தான் அப்போதே மன்னித்து விட்டதாக கூறினார். ஆனால், செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் சீசன் 2 நிகழ்ச்சியின் போது விஷால் தான் மீதுமீது அவதூறு பரப்பும் விதத்தில் சில பொய்யான தகவல்களை பரப்பினார். அதனால் தான் அதில் இருந்து நான் விலகிவிட்டேன் என்றும், அது குறித்து தான் மிகவும் வருத்தப்பட்டதாகவும் அப்பாஸ் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.