ஏபி டிவில்லியர்ஸ் ஓய்வு அறிவிப்பு “மன வேதனை” அளிக்கிறது - நடிகை அனுஷ்கா ஷர்மா
தென்னாப்பிரிக்க அணியின் முன்னால் கேப்டன் ஏபி டிவிலியர்ஸ், அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.
ஏபி டிவில்லியர்சின் ஓய்வு அறிவிப்பால் அவரது ரசிகர்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.சமூக ஊடகங்களில் அவரது ரசிகர்கள் இந்த அறிவிப்பு எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் இது எங்களுக்கு சோகமான நாள் என்றும் தெரிவித்துள்ளனர்.
அவரின் ஓய்வு அறிவிப்பை தொடர்ந்து அவரது ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் தங்கள் வருத்தத்தை சமூக வளைதலங்கள் வாயிலாக பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல நடிகை அனுஷ்கா ஷர்மாவும் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள செய்தியில்,
சிறந்த மனிதர்களில் ஒருவர் அவரை பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துவதாகவும் தெரிவித்தார். உங்களின் ஓய்வு அறிவிப்பு எனக்கு மன வேதனை அளிக்கிறது.என சோகமாக பதிவிட்டுள்ளார்.