சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாது - முன்னாள் வீரர் உறுதி!
சிஎஸ்கே குறித்து ஏபி டி வில்லியர்ஸ் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிஎஸ்கே
2025 ஐபிஎல் தொடர் மார்ச் 22 முதல் மே 25 வரை நடைபெற உள்ளது. முதல் போட்டியில் 2024 ஐபிஎல் தொடரின் சாம்பியன் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளன.
தொடர்ந்து, 23ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஏபி டி வில்லியர்ஸ் கருத்து
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள தென்னாப்பிரிக்க ஜாம்பவானும், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடியவருமான ஏபி டி வில்லியர்ஸும், "மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயமாக இந்த முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளும் சிறப்பாக விளையாடி முன்னேறும்.
முந்தைய ஆண்டின் (2024) சாம்பியன் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என நான் நினைக்கிறேன். இந்த நான்கு அணிகள் தான் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.