பெங்களூரு அணியில் மீண்டும் ஏ.பி.டிவில்லியர்ஸ்? - எப்போது இருந்து விளையாடுவார் தெரியுமா?
Virat Kohli
Royal Challengers Bangalore
By Thahir
நடப்பு ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணியில் விளையாடி வரும் விராட் கோலி 3 முறை கோல்டன் டக் அவுட்டானது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விராட் கோலி,வாழ்க்கையில் இதற்கு முன் நடக்காதது நடந்ததால் நிர்கதியாக நின்றதாகவும், பல நாட்களுக்கு பிறகு டக் அவுட் ஆனதால் தன்னை அறியாமலே சிரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பெங்களூரு அணியில் முன்னாள் வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் அடுத்த ஆண்டு முதல் பெங்களூரு பங்கேற்பார் எனவும் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
மீண்டும் பெங்களூரு அணியில் முன்னாள் வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் என்ற அறிவிப்பால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.