முதலில் புதுப்பேட்டை.. அடுத்து சோழனின் பயணம் : அப்டேட் கொடுத்த செல்வராகவன்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். அவர் இயக்கிய காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் புகழ் பெற்றவை .
செல்வராகவன்
இதில் புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படங்களின் அடுத்த பாகங்கள் வெளியாகும் என்று முன்பே இயக்குநர் செல்வராகவன் அறிவித்து இருந்தார்.
சென்னை டிடிகே சாலையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பிரபல இயக்குநர் செல்வராகவன் கலந்து கொண்டார்.
விரைவில் சோழனின் பயணம்
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் செல்வராகவன், “ புதுப்பேட்டை 2 படம்தான் முதலில் வரும் என்றும் அதற்கு பிறகுதான் ஆயிரத்தில் ஒருவன் 2 வரும் என்றும் கூறினார்.
தற்போது நடிகராகவும் களம் இறங்கி இருக்கும் செல்வராகவன் முன்னதாக பீஸ்ட் மற்றும் சாணி காயிதம் படங்களில் நடித்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது.