ஆவின் பால் பாக்கெட் விலை உயர்வு - அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!
200ML ஆவின் பால் பாக்கெட்டுகள் ரூ.9.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் ரூ.10க்கு விற்பனை செய்யப்படுவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கலர் மாற்றம் - விலை உயர்வு
ஆவின் நிறுவனம் சார்பில் பால், தயிர், மோர், பால்கோவா, ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பச்சை நிற த்தில் விற்பனை செய்யப்பட்ட பால் பாக்கெட் வயலட் நிறமாக மாற்றம் செய்து விற்பனைக்கு வந்துள்ளது.
அதுமட்டும் இல்லாமல் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 லிட்டர் எடை கொண்ட பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விலை ரூ.10 உயர்ந்தது.5 லிட்டர் எடை கொண்ட பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விலை ரூ.210க்கு விற்பனையாகி வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி ரூ.10 அதிகரித்து ரூ. 220க்கு விற்பனையானது.
இதனைத் தொடர்ந்து பிங்க் நிறத்தில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் பால் பாக்கெட்டை மஞ்சள் நிறத்தில் ஆவின் நிர்வாகம் மாற்றலாம் எனவும் தகவல் வெளியாகியது.
மக்கள் அதிர்ச்சி
ஆரஞ்சு' வண்ணத்தில் 200 மில்லி லிட்டர் பால் பாக்கெட் விற்பனைக்கு வந்த நிலையில் புதிய வடிவமாக ஆவின் டிலைட் என்ற பெயரில் ‛வைலட்' நிறத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது வழக்கமாக ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளில் வரும் 200ML ஆவின் பால் இன்று முதல் Violet நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது
200 மில்லி லிட்டர் ஆவின் பால் நேற்றைய தினம் ரூ.9.50க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று முதல் ரூ.10 என விற்பனை செய்யப்படுகிறது.முன் அறிவிப்பின்றி இந்த திடீர் விலை உயர்வு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது