ஆவின் பொருட்களை இனி பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் - இபிஎஸ்

Government of Tamil Nadu ADMK AIADMK Edappadi K. Palaniswami
By Thahir Dec 17, 2022 06:37 AM GMT
Report

எளியோர் மற்றும் நடுத்தர வர்கத்தினருக்கு ஆவின் பொருட்களை எட்டாக்கனியாக்கி இனி பணக்காரர்கள் மட்டும் பயன்படுத்த முடியும் என்கிற நிலைக்கு தள்ளியுள்ளது இந்த விடியா அரசு என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

விலையை ஏற்றிய ஆவின் - கொந்தளித்த இபிஎஸ் 

ஆவின் நெய் விலையை தொடர்ந்து வெண்ணெய்யின் விலையும் உயர்த்தியுள்ளது ஆவின் நிர்வாகம். இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இந்த விலை உயர்வுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ஆவின் நெய் விலையை ஒன்பது மாதத்தில் மூன்று முறை உயர்த்தி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த விடியா அரசிற்கு எனது கடுமையான கண்டனங்கள், கடந்த மார்ச் மாதம் ரூ.515 க்கு கிடைத்த ஆவின் நெய் தற்போது ரூ.115 உயர்த்தப்பட்டு ரூ.630க்கு விற்பனை விற்கப்படுகிறது.

aavin-products-rate-hike-eps-condemnation

எளியோர் மற்றும் நடுத்தர வர்கத்தினருக்கு ஆவின் பொருட்களை எட்டாகனியாக்கி இனி பணக்காரர்கள் மட்டுமே பயன்ப்படுத்த முடியும் என்கிற நிலைக்கு தள்ளியுள்ளது இந்த விடியா அரசு. இன்று வெண்ணை விலையையும் கிலோவிற்கு ரூ 20 உயர்த்தியுள்ளனர்.

எளிய மக்கள் தங்களுக்கு தேவையான குறைந்தபட்ச ஊட்டச்சத்தை பால் மற்றும் பால் பொருட்கள் மூலம்தான் பெற்று வருகின்றனர். தற்போது அதுகூட அவர்களுக்கு கிடைக்க விடாமல் தடுப்பதற்கு பெயர்தான் விடியலா? என கேள்வி எழுப்பியுள்ளார்.