விரைவில் வருகிறது ஆவின் குடிநீர் : அமைச்சர் நாசர் அறிவிப்பு
ஆவின் நிறுவனம் சார்பில் பாட்டில் குடிநீர் தயாரித்து விற்கப்படும் என்று அமைச்சர் சா.மு. நாசர் அறிவித்துள்ளார்.
அமைச்சர் நாசர்
இன்று செய்தியாளர்களிடம் பேசிய் அமைச்சர் நாசார் , இநஆவின் பால் தயாரிக்கும் 28 யூனிட்டுகளிலும் வாட்டர் பிளாண்ட் உள்ளதால் விரைவில் குடிநீர் பாட்டில் தயாரிப்பு பணி தொடங்க உள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார் .
வருவாய் அதிகரிக்க பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரங்களை வெளியிடுவது குறித்தும் பரிசீலனை செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
ஆவின் குடிநீர்
ஆவின் பால் பதப்படுத்தும் நிலையங்களில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் பாட்டில் குடிநீர் தயாரிக்கப்பட உள்ளது. 1/2 மற்றும் 1 லிட்டர் பாட்டில்களை பேருந்து நிலையம் போன்ற முக்கிய இடங்களில் ஆவின் குடிநீரை விற்க திட்டமிட்டப்பட்டுள்ளதாக கூறினார்.