ஆவின் ஆரஞ்சு பால் விலை லிட்டருக்கு ₹12 உயர்வு - ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய தகவல்...!
நாளை முதல் ஆவின் ஆரஞ்சு பால் விலை லிட்டருக்கு ₹12 உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆவின் ஆரஞ்சு பால் விலை லிட்டருக்கு ₹12 உயர்வு
இந்நிலையில், பால் கொள்முதல் விலை உயர்வைத் தொடர்ந்து, ஆவின் பிரிமியம் வகை பாலின் விலையை 25 சதவீதம் உயர்த்தியுள்ளது. பிரிமியம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.48ல் இருந்து ரூ.60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை உயர்வு வழங்குவதால் ஏற்படும் கூடுதல் செலவினத்தை ஈடுசெய்ய பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவீன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் -
வணிகரீதியாக பயன்படுத்தப்படும் பாலின் விலை மட்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் பயன்படுத்தும் சமன்படுத்தப்பட்ட பால், நீலம், பச்சை வண்ண பாக்கெட் பால் விலையில் மாற்றமில்லை.
நவம்பர் 5 முதல் வழங்கப்படும் பால் கொள்முதல் விலை உயர்வால் 4.20 லட்சம் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.