ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு: அன்புமணி ராமதாஸ் அறிக்கை

Anbumani Ramadoss
By Fathima Aug 10, 2026 08:54 AM GMT
Report

ஆவின் பால் அனைத்து மக்களுக்கும் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அரசு தவறியிருப்பது கவலையளிக்கிறது என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான அறிக்கையில்,  

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் பாலுக்கு கடந்த சில நாள்களாக கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

ஏழைகள் மற்றும் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமாக விளங்கும் ஆவின் பால் அனைத்து மக்களுக்கும் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அரசு தவறியிருப்பது கவலையளிக்கிறது.

ஆவின் நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் தினமும் 31 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

சென்னையில் மட்டும் தினமும் 16 லட்சம் லிட்டருக்கும் கூடுதலாக ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

ஆனால், கடந்த சில மாதங்களாகவே ஆவின் பால் விற்பனை படிப்படியாக குறைந்து விட்டது.

ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் ஆவின் பால் விற்பனை மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்பட்டு விட்டதாகவும், சென்னையில் 20% அளவுக்கு குறைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.