ஒரு லிட்டர் நெய் ரூ.630ல் இருந்து ரூ.700 ஆக உயர்வு - முழு விவரம்
ஆவின் ஒரு லிட்டர் நெய் பாட்டில் ரூ.630ல் இருந்து ரூ.700 ஆக உயர்ந்துள்ளது.
ஆவின்
ஆவின் நிறுவனம் நெய், வெண்ணெய் விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி ஆவின் நெய் விலை ஒரு லிட்டருக்கு ரூ.70, அரைலிட்டருக்கு ரூ.50 அதிகரித்துள்ளது. 15 மில்லி நெய் பாக்கெட் ரூ.14க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு ரூபாய் உயர்த்தி ரூ.15க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விலை உயர்வு
100 மில்லி பாக்கெட் ரூ.70ல் இருந்து ரூ.80 ஆகவும், 500 மிலி பாட்டில் ரூ.315ல் இருந்து ரூ.365 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு லிட்டர் நெய் பாட்டில் ரூ.630ல் இருந்து ரூ.700 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வெண்ணெய் விலை அரை கிலோவுக்கு ரூ.15 உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது அரை கிலோ வெண்ணெய் விலை ரூ.275 ஆக விற்பனை செய்யப்படுகிறது.