ஆவின் நெய் விலையை தொடர்ந்து வெண்ணெய் விலையும் உயர்வு

Government of Tamil Nadu
By Thahir Dec 17, 2022 05:55 AM GMT
Report

ஆவினில் நெய் விலையை தொடர்ந்து தற்போது வெண்ணெய் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

நெய் விலை உயர்வு 

திமுக ஆட்சிக்கு வந்த பின் ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டது. இதைதொடர்ந்து நெய்யின் விலையும் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது வெண்ணெய்யின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

15 லிட்டர் நெய் (டின்)- ரூ.10 ஆயிரத்து 725 (பழைய விலை ரூ.9,680); பிரீமியம் நெய் 1 லிட்டர்- ரூ.680 (ரூ.630); பிரீமியம் நெய் அரை லிட்டர்- ரூ.365 (ரூ.340). நெய் அரை லிட்டர்- ரூ.305 (ரூ.285); நெய் 100 மி.லி. (பவுச்)- ரூ.70 (ரூ.65); நெய் 100 மி.லி. (ஜார்)- ரூ.75 (ரூ.70); நெய் 15 மி.லி. (பவுச்)- ரூ.14 (ரூ.12); நெய் 1 லிட்டர் (அட்டைப்பெட்டி)- ரூ.620 (ரூ.575); நெய் அரை லிட்டர் (அட்டைப்பெட்டி)- ரூ.310 (ரூ.280). நெய் 1 லிட்டர் (ஜார்)- ரூ.630 (ரூ.580); நெய் அரை லிட்டர் (ஜார்)- ரூ.315 (ரூ.290); நெய் 200 மிலி. (ஜார்)- ரூ.145 (ரூ.130); நெய் 5 லிட்டர் (ஜார்)- ரூ.3,250 (ரூ.2,900) என்று விலை உயர்த்தப்பட்டது.

வெண்ணெய் விலை உயர்வு 

கடந்த மார்ச் 4-ந் தேதி லிட்டருக்கு ரூ.20, கடந்த ஜூலை 21-ந் தேதி ரூ.45 என்ற அளவில் ஆவின் நெய்யின் விலை உயர்த்தப்பட்டது. தற்போது லிட்டருக்கு ரூ.50 என்ற அளவில் ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் நெய்விலையை தொடர்ந்து தற்போது வெண்ணெய் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Aavin Butter Price Hike

அறிவிப்பில் சமையல் பயன்பாட்டிற்கான உப்பு கலக்காத வெண்ணெய் 100 கிராம் ரூ.52ல் இருந்து ரூ.55 ஆகவும் 500 கிராம் ரூ.250ல் இருந்து ரூ.260 ஆகவும் உயர்ந்துள்ளது.