முக தசை சிதைவு நோய் : சிறுமி தான்யாவிற்கு 8 மணி நேரம் அறுவை சிகிச்சை
அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு இன்று 8 மணி நேர அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது.
அரிய வகை முகச்சிதைவு நோய்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வீராபுரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ். இவரது மனைவி சௌபாக்கியம். இந்த தம்பதிகளுக்கு 9 வயதில் தான்யா என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி அரியவகை முக சிதைவு நோயில் பாதிக்கப்பட்டுள்ளார்.
பிறந்த போது வழக்கம் போல அனைத்து குழந்தைகளையும் போலத்தான் இருந்துள்ளார் தான்யா.தான்யாவின் முகத்தில் தோன்றிய கரும்புள்ளிகளை பார்த்த பெற்றோர்கள் சாதாரண ரத்தகட்டு என நினைத்துள்ளனர். ஆனால் பின்னர்தான் தான்யாவிற்கு உள்ளது அரியவகை நோய் என்பது தெரியவந்தது .
ஒரு பக்க கண்ணம் முழுவதும் சிதைந்த நிலையில் அவதிப்பட்டு வந்துள்ள சிறுமியினால், பள்ளி படிப்பை தொடர முடியாமல் அவதி அடைவது குறித்து செய்தி ஊடகங்களில் வெளியிடபட்டது.
இதனை அறிந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த சிறிமிக்கு தேவையான அனைத்து உதவிகளும் தமிழகஅரசு மூலம் செய்து தரப்படும் என கூறியிருந்தார்
முதலமைச்சர் உதவி
அந்த வகையில் முதல்வரின் நேரடி கண்காணிப்பில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
8 மணி நேரம் சிகிச்சை
மேலும் தினமும் அந்த சிறுமியை தமிழக பால்வளத் துறை அமைச்சர் நாசர் தினமும் மருத்துவமனைக்கு வந்து அவரின் நலம் விசாரித்தார். அது மட்டும் இன்றி இன்று சிறுமி தானியாவிற்க்கு 10 பேர் கொண்ட மருத்துவ குழுவினரால் அறுவை சிகிச்சை இன்று 8மணிக்கு நடைபெற உள்ளதாகவும்
இந்த நோய் இந்தியாவிலேயே முதன்முறையாக சிறுமி ஒருவருக்கு முகைச்சிதைவு அறுவைசிகிச்சை நடைபெறவுள்ளதாகவும் மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளனர்