"கண்ணாலம் கண்ணாலம் அம்மாவுக்கு கண்ணாலம்" - தாய்க்கு மறுமணம் நடத்தி வைத்து அழகு பார்த்த பிள்ளைகள், வைரலாகும் புகைப்பட்ம்

picture goes viral aastha varma arranges marriage for mother
By Swetha Subash Dec 17, 2021 11:02 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சமூகம்
Report

ஐம்பது அறுபது வயது ஆனாலும் அன்பு மலரும் என்று அவ்வை சண்முகியில் காதல் மன்னன் ஜெமினி கணேசன் உருகுவது போல் துணைக்கான நியாயமான தேடல் எப்போதுமே தவறவில்லை என்ற புரிதல் இப்போது சமூகத்தில் மேலோங்கி வருகிறது.

அதுவும் குறிப்பாக பெண்ணின் துணை தேடல் மீதான பார்வை முற்றிலுமாக மாறி வருகிறது. இது வரவேற்கத்தக்கது.

சில வருடங்களுக்கு முன்னர் மகள் ஒருவர் சமூகவலைதளம் மூலம் தனது தாய்க்கு துணை தேடினார். அந்த ட்வீட் மிகப் பெரிய செய்தியானது.

ஆஸ்தா வர்மா என்ற அந்த யுவதி ட்விட்டரில் தனது தாயுடனான புகைப்படத்தைப் பகிர்ந்து, எனது தாய்க்கு 50 வயது மதிக்கத்தக்க அழகான குடிப்பழக்கம் இல்லாத நல்ல நிலையில் இருக்கும் வரன் தேவை என்று கூறியிருந்தார்.

அந்த இளம் பெண்ணும், இளைஞரும் சேர்ந்து தங்களின் தாய்க்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் வைரலாகியுள்ளது. இந்த திருமணம் இந்தியாவில் நடந்துள்ளது என்பது மட்டுமே புரிந்து கொள்ள முடிகிறது.

தனது ட்விட்டர் ஹேண்டிலில் இருந்து அந்தப் பெண் தனது தாயின் திருமண புகைப்படங்கள், வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார். அதில், நான் எனது 15-வது வயதில் இருந்து அம்மாவை மறுமணம் செய்யச்சொல்லி வருகிறேன்.

ஆனால் அது இன்று நிறைவேறி உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன் விஷம் தோய்ந்த வாழ்க்கையில் இருந்து விடுபட்ட அம்மா இன்று அவருக்கான வாழ்க்கையில் இணைந்துள்ளார்.

நானும் சகோதரனும் ஆண் துணை இல்லாமல் வாழ்ந்து விட்டோம். இப்போது எங்கள் வாழ்வில் அப்பா கிடைத்துவிட்டார் என்று பதிவிட்டுள்ளார்.

தாய்க்கு மெஹந்தி இடும் நிகழ்ச்சி, மோதிரம் மாற்றும் நிகழ்ச்சி, அரங்க அலங்காரம் என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து ரசித்து ட்விட்டரில் ஆவணப்படுத்தியுள்ளார் மகள்.

மகனும் சும்மா இல்லை. அவரும் தாய்க்கு வாழ்த்து ட்வீட் பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்களுக்கு இணையவாசிகள் பலரும் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

பெண்களுக்கும் வாழ உரிமை இருக்கிறது. மணமுறிவு, கணவர் இறப்பு ஆகியனவற்றால் பாதிக்கப்படும் பெண், குழந்தைகள் இருக்கின்றன என்பதற்காகவே இன்னொரு வாழ்க்கையை யோசிக்கக் கூட என்பதில்லை.

அந்தத் தாயின் மனதில் மீண்டும் காதல் அரும்பி அது கல்யாணமாக முடிந்ததற்கு வாழ்த்துகள். கடவுள் தம்பதியை ஆசிர்வதிக்கட்டும் என்று வாழ்த்தியுள்ளனர்.