உலகக்கோப்பை தொடங்கும் சூழலில் சூதாட்ட புகாரில் முக்கிய வீரர்! அனைத்துவித கிரிக்கெட்டிலும் தடை
அமெரிக்க கிரிக்கெட் அணி வீரர் ஆரோன் ஜோன்ஸ் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளார்.
CWI மற்றும் ஐசிசியின் ஊழல் தடுப்புக் குறியீட்டை மீறியதற்காக, அமெரிக்காவின் ஆரோன் ஜோன்ஸ் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
File
இவை பார்படாஸில் நடைபெற்ற 2023-24 Bim10 தொடரில் அவர் பங்கேற்றது தொடர்பானது என்று ஐசிசி கூறியுள்ளது, ஆனால் சர்வதேச போட்டிகள் தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளும் இதில் அடங்கும்.
ஆரோன் ஜோன்ஸ் மீது ஐசிசி ஊழல் தடுப்புக் குறியீட்டின் ஐந்து விதிமீறல்களுக்காகக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, அவர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க அவருக்கு 14 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடங்க ஒரு வாரமே உள்ள நிலையில், அமெரிக்க அணியின் முக்கிய வீரருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.
