15 வருடமா அந்த இந்திய பவுலரை மட்டும் சமாளிக்கவே முடியவில்லை - ஓப்பனாக சொன்ன ஆரோன் பிஞ்ச்!

Jiyath
in கிரிக்கெட்Report this article
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச் இந்திய வீரரை குறித்து பேசியுள்ளார்.
ஆரோன் பிஞ்ச்
ஆரோன் ஜேம்ஸ் பிஞ்ச் ஒரு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆவர். வலது கை பேட்ஸ்மேனான இவர் கடந்த 2006ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற 19 வயதிற்குப்பட்டோருக்கான போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமானார்.
2013ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 156 ரன்களை எடுத்து டி20 வரலாற்றில் அதிகபட்ச ரன்களை எடுத்து சாதனை படைத்தார். பின்னர் 2018ம் ஆண்டு சிம்பாவே அணிக்கு எதிரான போட்டியில் 172 ரன்களை அடித்து தனது முந்தைய சாதனையை முறியடித்தார். இதுவரை 146 ஒருநாள் மற்றும் 103 டி20 போட்டிகளிலும் 5 டெஸ்ட் போட்டிகளும் ஆரோன் பிஞ்ச் விளையாடியுள்ளார்.
மொத்தமாக இதுவரை 8,804 ரன்களை அடித்துள்ள ஆரோன் பிஞ்ச் 19 சதங்களும் 51 அரை சதங்களும் அடித்துள்ளார். உலகக் கோப்பை வாங்கி தந்த கேப்டன் என்ற பெருமையும் இவருக்கு சேரும்.
ரசிகரின் கேள்விக்கு பதில்
இந்நிலையில் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் புவனேஷ்குமார் உங்களை ஏன் தடுமாற வைத்திருக்கிறார். நீங்கள் என்ன தவறு செய்தீர்கள் என்று உங்களால் விவரிக்க முடியுமா? வேகப்பந்து வீஸும் போது நீங்கள் கால்களை சரியாக நகர்த்தி விளையாடவில்லையா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஆரோன் பிஞ்ச் ' என்னால் அது நடக்காமல் இருப்பதை தடுக்க முடியவில்லை என்று பதிலளித்துள்ளார்.
Yep!! Tried for 15 years to stop that happening ? https://t.co/5g1b0rFPRH
— Aaron Finch (@AaronFinch5) August 10, 2023