விலகிய ஆரோன் பிஞ்ச்.. ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டன் இவரா?

AUS vs WI Aaron finch Alex carey
By Petchi Avudaiappan Jul 20, 2021 11:37 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

 வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் விலகியுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி-20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி இழந்தது.

 விலகிய ஆரோன் பிஞ்ச்.. ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டன் இவரா? | Aaron Finch Ruled Out In Wi Tour

இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தொடங்க உள்ளது. இதில் மேலும் ஒரு பின்னடைவாக முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக கேப்டன் ஆரோன் பிஞ்ச் விலகியுள்ளார்.

இதனால் முதலாவது ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக அலெக்ஸ் கேரி நியமிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதன்மூலம் ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனான பதவியேற்கும் 26வது நபர் என்ற பெருமையை அலெக்ஸ் கேரி பெற்றுள்ளார்.