கரணம் அடித்த கபடி வீரர் : கண்ணிமைக்கும் நேரத்தில் மரணம்.. சோகத்தில் பொது மக்கள்
கோவில் திருவிழாவில் கபடி போட்டிக்காக பயிற்ச்சியில் கரணம் அடிக்கும் போது மயங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கபடி போட்டி
திருவண்ணாமலை மாவட்டம் களத்துமேட்டு பகுதியில் மாரியம்மன் கோயிலில் கூழ் வார்க்கும் திருவிழா நடைபெற்றது , இதில் இதில் களத்துமேட்டு கே.எம்.எஸ். கபடி குழுவினர் கபடி போட்டிக்கான பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளனர்.
கரணம் போட்டதால் மரணம்
அப்போது அந்த பகுதியை சேர்ந்த 34 வயதான வினோத் குமார் என்ற கபடி வீரர் கரணம் அடிக்கும் பயிற்சி மேற்கொண்ட போது மயங்கி விழுந்தார். உடனடியாக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிக்கிச்சை பலனின்றி பலியானார்.
இந்த சம்பவம் ஆரணி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, அதே சமயம் கபடி வீரர் கரணம் அடிக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது .
இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியில் கபடி போட்டியின் போது இளம் வீரர் ஒருவர் ஆட்டக் களத்திலே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.