செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பாராட்டை அள்ளிய சிவகார்த்திகேயன் மகள்
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில், நடிகர் சிவகார்த்திக்கேயனின் மகள் ஆராதனா தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
முடிவுக்கு வந்த போட்டி
மாமல்லபுரத்தில் 12 நாட்களாக நடைபெற்று வந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, நேற்ற்று கண்கவர் நிகழ்ச்சிகளுடன் நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகளமாக நிறைவு பெறுற்றது.
பாராட்டை அள்ளிய ஆராதனா
இந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனட் இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திக்கேயனின் மகள் ஆராதனா தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்.
இது குறித்த புகைப்படங்களை வெளியிட்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.ஆராதனா, சிவகார்த்திகேயன் தயாரித்த கனா திரைப்படத்தில் வாயாடி பெத்த புள்ள பாடலை பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.